Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: CRS மதிப்பெண்

பிரிட்டிஷ் கொலம்பியா : குடிபெயர கனவுள்ளவர்களுக்கு கனடா ஓர் உகந்த நாடு!

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் இயற்கை அழகை பற்றி இவ்வுலகு அறியும்.

இந்த  மாகாணம் அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் வனப்பகுதியின் பரந்த பகுதிகளை கொண்டிருப்பதால் இங்கு பயணிப்பவர்களுக்கு விருப்பமான இடமாக அமைகிறது. ஆனால் கனடா குடியேற்ற ஆர்வலர்களைப் பொறுத்தவரை, மாகாணத்தின் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குடிபெயர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளது. விக்டோரியா, மாகாணத்தின் தலைநகராகவும் மற்றும் வான்கூவர் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், வாழ்வதற்கும் அனைத்து வகையிலும் சிறந்த இடமாக உள்ளது. இந்த மாகாணம் ஒரு வலுவான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் குடியிருப்போர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  குடிபெயர்பவர்களுக்கு பிடித்த  இடமாக மாற்றும் முக்கிய காரணிகளை இப்போது பார்கலாம்.

 

உயர் வாழ்க்கைத் தரம்:

உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவை புலம்பெயர்ந்தோருக்கு பிடித்த இடமாக மாற்றுவது உயர் வாழ்க்கைத் தரம்தான்.

 

சிறந்த சுகாதாரம்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிப்பவர்கள் மருத்துவ சேவைகள் திட்டம் (MSP) என்ற பெயரில் ஒரு பிரத்யேக சுகாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளனர். இந்த திட்டத்தில் பதிவுசெய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சிறந்த சுகாதார சேவையை பிரிட்டிஷ் கொலம்பியா உறுதி செய்கிறது.

 

அதிக ஊதியங்கள் மற்றும் பிற சலுகைகள்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் அதிக சம்பளத்தைப் பெறுகிறார்கள். முதலாளிகள் ஊழியர்களுக்கு பல்வேறு சுகாதார மற்றும் பிற சலுகைகளையும் வழங்குகிறார்கள். இருப்பினும், ஒரு நபரின் சம்பளம் அவர்களின் வேலை, கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தது.

 

பன்முக கலாச்சாரம்:

பிரிட்டிஷ் கொலம்பியா என்பது பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வரும் நபர்கள் ஒன்றாக வாழும் இடமாகும். இந்த மாகாணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், பார்வையாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளனர். இது பிரிட்டிஷ் கொலம்பியாவை கலாச்சார பன்முகத்தன்மையின் இடமாக மாற்றுகிறது.

 

பல வாய்ப்புகள்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு தொழில் துறைகளில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

 

பாதுகாப்பு:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குற்ற விகிதம் மிகக் குறைவு மற்றும் சட்டங்களும் மிகவும் வலுவானவை. இது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை வேலை செய்வதற்கும், பாதுகாப்பாக வாழ்வதற்கும் ஒரு நல்ல இடமாக மாற்றுகிறது.

 

அடுத்த 20 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 903,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 77% வேலைகளுக்கு இரண்டாம் நிலை மட்டத்திற்கு மேல் கல்வித் தகுதி தேவைப்படும். பிரிட்டிஷ் கொலம்பியா திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வை ஊக்குவிக்கிறது, ஏனெனில் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புகள் அவசியம்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், திறமையான தொழிலாளர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு குடிபெயர, அவர்கள் மாகாணத்தில் ஒரு தொழில் நிறுவனத்திடமிருந்து நிரந்தர வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நியமன திட்டத்தின் (BC PNP) கீழ் திறமையான தொழிலாளர்களுக்கான குடியேற்ற திட்டங்களில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியாவின் திறன் குடிவரவு பதிவு அமைப்பு (SIRS) உடன் பதிவு செய்ய வேண்டும்.

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  நிரந்தரக் குடியுரிமை பெற  முக்கிய பாதைகள் பின்வருமாறு:

 

ஸ்கில்ட் இம்மிகிரேஷன் : பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக தேவை உள்ள தொழில்களில் தனித்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான பாதை இது. கனடாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு  மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின்  அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழைக்கும் திட்டம் இது. விண்ணப்பம் மற்றும் பதிவு செயல்முறைகள் முற்றிலும் ஆன்லைன்மயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிட்டிஷ் கொலம்பியா :  பிரிட்டிஷ் கொலம்பியாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் தகுதியான தனித்திறன் கொண்ட தொழிலாளர்களை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விரைவாக குடிபெயர உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கூட்டாட்சி பொருளாதார குடிவரவு திட்டங்களில் ஒன்றிலும்  தங்களை தகுதியுள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில் வேட்பாளரின் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி அனுபவம் தேவையில்லை என்றாலும், விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பணி அனுபவம் கட்டாயமாகும். கல்வி மற்றும் மொழி தொடர்பான தகுதித் தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

 

பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் :  பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் திட்டம் ஒரு குடியேற்ற பாதையாகும்,

இது மாகாணத்தின் தொழில்நுட்ப துறைகளில்  தனித்திறன் கொண்டவெளிநாட்டு தொழிலாளர்களை அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர் இத்திட்டத்தின் கீழ் உள்ள 29 தகுதியான தொழில்கள் ஏதேனுமொரு பிரிட்டிஷ் கொலம்பியா தொழில் நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்புச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்புச்சான்றிதழ்  குறைந்தபட்சம் ஒரு வருடம் காலவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் வேட்பாளரின் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் குறைந்தது 120 நாட்களுக்கு செல்லும்படி இருக்க வேண்டும்.

 

தொழில் முனைவோர் குடியேற்றம் : பிரிட்டிஷ் கொலம்பியாவின்  இத்திட்டம் அங்குள்ள பிராந்திய சமூகங்களில் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கானது.

 

நீங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய இடம் பிரிட்டிஷ் கொலம்பியா என்று நினைக்கிறீர்களா? பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் கனடா குடியேற்றம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், எங்கள் அனுபவம்மிக்க கனடா குடிவரவு ஆலோசகர்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: http://bit.ly/bc_migrate

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

ஆல்பர்ட்டா PNP மூலம் உங்கள் கனடா கனவை நினைவாக்குங்கள்

கனடாவின் மிக சிறந்த மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டாவிற்கு குடிபெயர உலகெங்கிலும் உள்ளவர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். கனடாவின் இந்த மேற்கு மாகாணம் குடிபெயர்ந்தவர்களுக்கு மத்தியில் பிரபலமடைய வலுவான பொருளாதாரம், ஏராளமான வேலை வாய்ப்புகள் மற்றும் அழகான நிலப்பரப்புகள் ஒரு  முக்கிய காரணிகளாக உள்ளன. ஆல்பர்ட்டா மாகாணத்தில், கனடாவின் இரு முக்கிய நகரங்களான எட்மோண்டன் மற்றும் கேல்கரி  அமைந்துள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணம் இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது மேலும் கனடாவின் ஆற்றல் மாகாணம் என்று எல்லோராலும் பிரபலமாக அறியப்படுகிறது. ஆல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறை, படித்த மற்றும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் என உறுதியளிக்கிறது. இதைத்தவிர, ஆல்பர்ட்டாவில் வசிப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளிலிருந்து  தொழில் தொடங்க வருபவர்களுக்கு  மாகாணத்தில் குடிபெயர்வதற்கு சாதகமான சூழலைத் தக்கவைக்க ஆல்பர்ட்டா அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

புதிதாக குடிபெயர்பவர்கள், ஆல்பர்ட்டா சமூகத்துடன் நன்கு ஒருங்கிணைக்க உதவும் வகையில் மாகாணத்தின் அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய, திறமை வாய்ந்த தொழில் துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பட்டம் பெற்ற தொழில் நுட்ப துறைகளை சார்ந்திடாத தொழிலாளர்களையும் ஆல்பர்ட்டா மாகாணம் அழைக்கிறது.

 

ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் குடிபெயர்பவர்களுக்கு மிகவும் கவரும்  காரணியாக உள்ளது. அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள், குறைந்த வரி விகிதங்கள், அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை ஆல்பர்ட்டாவை கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் பிற முக்கிய காரணிகளாகும்.

ஆல்பர்ட்டா மாகாண பரிந்துரை திட்டம்

கனடா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆல்பர்ட்டா மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான  அனுமதி வழங்குகிறது. ஆல்பர்ட்டா மாகாணம்,  நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்ககூடிய  திறன்கள் மற்றும் தகுதிகள் கொண்ட நபர்களை “ஆல்பர்ட்டா குடியேற பரிந்துரைக்கப்பட்ட திட்டம் (AINP)” மூலம் வரவேற்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று முக்கிய குடியேற்ற பிரிவுகள் உள்ளன

  1.  ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு
  2.  ஆல்பர்ட்டா வாய்ப்புகள் பிரிவு
  3.  ஆல்பர்ட்டா சுயதொழில் உழவர் பிரிவு 

 

ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு

ஆல்பர்ட்டாவிலிருந்து, ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்புடன் ஏற்கனவே ஒரு சுயவிவரத்தை உருவாக்கியவர்கள்  ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு வழியாக மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்கலாம். பெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவிலிருந்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை குடிபெயர விண்ணப்பிக்க மாகாணம் அனுமதியளிக்கிறது. ஆல்பர்ட்டா குடிபெயர விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் CRS 300 மதிப்பெண்கள் கட்டாயமாக பெற வேண்டும். இவ்வழியிலேயே ஆல்பர்ட்டா குடியேற பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மூலம் நபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள.

ஆல்பர்ட்டாவில் குடிபெயரவிருக்கும் விண்ணப்பாதரர்களுக்கு, அங்கு பணி நியமன சான்றிதழோ, மாகாணத்தில் பணி புரிந்த அனுபவமோ, அல்பேர்ட்டாவில் உள்ள ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பட்டம் அல்லது மாகாணத்தில் வசித்து வரும் நெருங்கிய உறவினர்கள் மேற்கண்டவை மூலமாகவோ குடிபெயர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த மாகாண அழைப்பை ஏற்று வெற்றிகரமாக விண்ணப்பிப்பவர்கள் 600 CRS மதிப்பெண்களை பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் அடுத்தடுத்த பெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் விண்ணப்பித்து  கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற உதவுகிறது.

ஆல்பர்ட்டா வாய்ப்புகள் பிரிவு

பணி அனுமதியுடன், ஆல்பர்ட்டாவில் நிரந்தர குடிபெயர்ப்புக்குத் தகுதியான தொழில் புரிந்து கொண்டு தற்காலிகமாக வசிக்கும் ஒருவர் ஆல்பர்ட்டா வாய்ப்பு பிரிவு மூலம் மாகாணதில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிக்கலாம்.. இந்த பிரிவின் கீழ் தகுதி பெற விண்ணப்பதாரர் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் CLB  4-க்கு சமமான மொழி புலமையை பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் ஆல்பர்ட்டாவின் பணி நியமன சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

 

ஆல்பர்ட்டா சுயதொழில் உழவர் பிரிவு

விவசாயத்தில் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் ஆல்பர்ட்டாவிலிருந்து சுயதொழில் செய்பவர் உழவர் பிரிவு மூலம் மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச தனிப்பட்ட நிகர மதிப்பு $5,00,000 இருக்க வேண்டும் மற்றும் கனடாவில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆல்பர்ட்டாவுக்கு நிரந்தரமாக குடிபெயருவது பற்றி மேலும்தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? CanApprove- வின் மிகக் திறமையான குடியேற்ற ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். கனடாவில் குடிபெயர்வது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும் உதவிகளுக்கும் எங்களை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: http://bit.ly/alberta_migrate

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

கனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது!

உயர் வாழ்க்கைத் தரங்கள், ஏராளமான தொழில் வாய்ப்புகள், அழகான நிலப்பரப்புகள். ஒவ்வொரு வகையிலும், கனடா ஒரு வெளிநாட்டில் சிறந்த வாய்ப்புகளை விரும்புபவர்களின் கனவுநிலையாகும். கனடா, அங்கு குடியேறியவர்களை மனதார வரவேற்கிறது, மேலும் அவர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையையும் உறுதி செய்கிறது. கனடாவின் தற்போதைய அரசியல்-சமூக-பொருளாதாரக் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களுக்கு மிகவும் சாதகமானவை. அமெரிக்கா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்கியுள்ளதால் கனடா ஏற்கனவே ஒரு வெளிநாட்டு நிலத்திற்கு குடிபெயர விரும்புவோருக்கும், வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கும் பிடித்த இடமாக மாறியுள்ளது.

கனடா குடியேற்றம் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, இங்கே கிளிக் செய்க.

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. லிபரல் கட்சி அரசாங்கத்தின் கடைசி பதவிக்காலத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு சாதகமான பல திட்டங்களையும் கொள்கைகளையும் அவர்கள் செயல்படுத்தியிருந்தனர். புதிய அரசாங்கமும் புலம்பெயர்ந்தோருக்கு சாதகமான முடிவுகளை தொடர்ந்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபரல் கட்சி அல்லது எதிர்க்கும் கன்சர்வேடிவ் கட்சி அல்லது கனடாவின் வேறு எந்த முக்கிய கட்சியாக இருந்தாலும், கனடாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு குடியேற்றம் முக்கியமானது என்பது அவர்களின் கருத்து.

தேர்தலின் ஒரு பகுதியாக, கனடாவிற்கு குடியேறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் லிபரல் கட்சி பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. இவற்றில் ஒன்று, குடியேற்ற நிலைகளை மிதமான மற்றும் நியாயமான முறையில் தொடர்ந்து அதிகரிப்பது. கனடா குடியுரிமைக்கான விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விடுபடுவது மற்றொரு வாக்குறுதியாகும். தற்போது கனடா குடியுரிமைக்கான விண்ணப்பக் கட்டணம் 630 டாலர்கள்.

Canada CRS Calculator

குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை ஆகியவை கனடா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள். எனவே கனடா புலம்பெயர்ந்தோருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச பொதுப் பள்ளி கல்வி, இலவச சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் பலவற்றை வழங்குகிறது. நாட்டிற்கு குடிபெயர்ந்த ஒருவர் கனேடிய குடிமக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெறுகிறார்.

கனடாவின் தற்போதைய குடிவரவு நிலைகள் திட்டத்தின் படி, 2021 க்குள் கிட்டத்தட்ட 350000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க நாடு திட்டமிட்டுள்ளது. மேலும், விரைவில் அறிவிக்கவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான குடிவரவு திட்டத்திலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் இலக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா குடியேற்றம் மற்றும் மாகாண நியமன திட்டங்கள்:

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் கனடாவுக்கு குடிபெயர பல பாதைகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம். ஆனால் குடிவரவு ஆர்வலர்கள் பலர் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டத்திற்கான தகுதிகளை பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றனர். அத்தகைய குடியேற்ற ஆர்வலர்களுக்கு மாகாண நியமன திட்டங்கள் ஒரு நல்ல வழி. கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் அவற்றின் சொந்த குடிவரவு திட்டங்களைக் கொண்டுள்ளன. கனடாவுக்கு குடிபெயர விரும்புவோர் தங்களுக்கு பிடித்த கனேடிய மாகாணம் / பிரதேசத்தின் மாகாண வேட்பாளர் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாகாண வேட்பாளர் திட்டங்களின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், தகுதி பெறுவதற்கு அவர்களுக்கு உயர் விரிவான தரவரிசை முறை மதிப்பெண் தேவையில்லை (எக்ஸ்பிரஸ் நுழைவு வேட்பாளர்களுக்கு பல தகுதி காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்). எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் இல்லாத வேட்பாளர்கள் மாகாண வேட்பாளர் திட்டங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மாகாண நியமன திட்டங்கள் குறித்த சமீபத்திய செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்க

அந்தந்த மாகாண நியமன திட்டங்கள் மூலம், ஒவ்வொரு கனேடிய மாகாணம் / பிரதேசமும் அந்த வேட்பாளர்களை அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க தனித்திறன், கல்வி மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களை பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட திட்டத்திற்கும் வெவ்வேறு அளவுகோல்கள் உள்ளன. அதேபோல், திறமையான தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், கனடாவிலிருந்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள், வணிக நபர்கள் ஆகியோர்க்கு மாகாண வேட்பாளர் திட்டங்களின் கீழ் தனி குடியேற்ற பிரிவுகள் உள்ளன.

எந்த மாகாண வேட்பாளர் திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை அறிய, இங்கே கிளிக் செய்க.

 

பின்வரும் கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் அவற்றின் சொந்த மாகாண பரிந்துரை திட்டங்களைக் கொண்டுள்ளன

·        ஆல்பர்ட்டா

·        பிரிட்டிஷ் கொலம்பியா

·        மனிடோபா

·        புதிய பிரன்சுவிக்

·        நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர்

·        வடமேற்கு பிரதேசங்கள்

·        நோவா ஸ்கோடியா

·        ஒன்டாரியோ

·        பிரின்ஸ் எட்வர்ட் தீவு

·        சாஸ்கட்சுவான்

·        யுகான்

கனடாவில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு சிறந்த எதிர்காலம் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்களா? உங்கள் கனவை நனவாக்குவதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குங்கள்! தேவையான ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் மிகக் குறைந்த நேரத்துடன் கனடாவுக்கு குடிபெயர CanApprove உதவும்.

மேலும் தகவலுக்கு, நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

வாட்ஸ்அப்: http://bit.ly/33bAXA5

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்