Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: Jobs in Canada

மேலாண்மை வல்லுனராக பணிபுரிபவரா நீங்கள்? கனடா உங்களை அழைக்கிறது. எங்களின் உதவியுடன் இனிதே குடிபெயருங்கள்!

கனடாவில் சமீபத்திய ஆண்டுகளில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்பது நாம் அறிந்ததே. எனவே வெளிநாடு வாழ் பணியாளர்களை (Skilled Workers) குடியுரிமையளித்து வரவேற்கத்திட்டமிட்டுள்ளது கனடா. எக்ஸ்பிரஸ் என்ட்ரித்திட்டத்தின் (Express Entry) கீழ் மேலாண்மை வல்லுனர்களாக முதன்மை வகிக்கும் ஸ்கில்டு ஒர்கர்களுக்கு, வேலையுடன் குடிபெயரும் வாய்ப்பையும் அளித்து வரவேற்கிறது. 

ஒரு மேலாண்மை நிபுணராக (Management Professional) கனடாவுக்கு எவ்வாறு குடியேறுவது என்பது குறித்த விரிவான பதிவு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ள… தொடரவும். 

canada Pnp finder

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான NOC (NOC of Management Professionals) பட்டியல் குறியீடு 

தேசிய தொழில் வகைப்பாடு (National Occupation Classification) பட்டியல் குறியீடு கனடாவில் தேவைப்படும் பணியாளர்களின் தொழில்களையும் தொழிலாலர்களையும் குறியீடுகளின் மூலம் வகைப்படுத்தியுள்ளது. வெவ்வெறு பணிகளுக்கான குறியீடுகள் பல இருக்கும் பட்சத்தில், எண் 0 மேலாண்மை நிபுணர்களுக்கானது (0 for Management Professionals).

 NOC பட்டியல் குறியீடு  தொழில்  NOC
 0211 பொறியியல் மேலாளர்கள் (Engineering Managers)  0
0112    மனித வள மேலாளர்கள் (Human Resource Managers)  0
 0122  முதலீட்டு மேலாளர்கள் (Investment Managers)  0
 0311  சுகாதார பராமரிப்பு மேலாளர்கள் (Managers in Health care)  0
 0651  வாடிக்கையாளர் சேவை மேலாளர்கள் (Customer Service Manager)  0
 0711  கட்டுமான மேலாளர்கள் (Construction Managers)  0
 0014 மூத்த மேலாளர்கள் – சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் சமூக சேவைகள & உறுப்பினர் நிறுவனங்கள் (Senior managers – health, education, social and community services and membership organizations)   0

  

கனடாவில் மேலாண்மை நிபுணர்கள் பெரும் வேலை வாய்ப்புகள்: 

கனடாவில் மேலாண்மை நிபுணர்கள் (Management Professionals) நிரப்ப வேண்டிய பணியிடங்கள் ஏராளமாக உள்ளது.  இந்த காலியிடங்களை நிறைவு செய்ய சில பணிகளின் தலைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

Renewable Project Manager Administrators under various medical services Corporate accounts manager – banking, credit, and investment 
Energy Manager Directors under various medical services Corporate services manager – banking, credit, and investment
Green Building Project Manager Accounts manager – banking, credit, and investment Operations manager – banking, credit, and investment
Energy Efficiency Program Manager  Assistant operations manager – banking, credit, and investment  Personal services manager – banking, credit, and investment
Energy Policy Analyst  Assistant regional manager – banking  Human resources administrator
Business Development/Marketing Manager Branch manager – banking, credit and investment  Pay and benefits manager
Construction project coordinator  Industrial construction manager, Human resources administrator  Residential construction manager

  

கனடாவில் பல்வேறு துறையிலுள்ள மேலாண்மை நிபுணர்களுக்கான மதிப்பிடப்பட்ட சம்பளம்: 

கனேடிய மாகாணங்களான (Canadian provinces) ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக், மனிடோபா மற்றும் பிறவற்றில் மேலாண்மை நிபுணர்களுக்கான தேவை அதிகம் உள்ளது. மேலும் இந்த காலி இடங்களை நிறைவு செய்ய வெளிநாடுகளில் வாழும், இத்துறையில் திறமை வாய்ந்த ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (skilled workers) எனப்படும் பணியாளர்களை சார்ந்துள்ளது கனடா.

Canada CRS point

மார்க்கட் ட்ரெண்ட் எனப்படும் சந்தைப்போக்கின் அடிப்படையில் பல்வேறு பிஸ்னஸ் துறைகளின் மேலாண்மை நிபுணர்களுக்கான சம்பளம் தோராயமாக ஓராண்டின் பேரில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

IT மேலாளர்கள் (IT Managers) $ 150,000
மின்சக்தி மேலாளர்கள்(Energy Managers) $ 90,000
ஹெல்த்கேர் மேலாளர்கள்(Healthcare Managers) $ 87,000
நிதி மேலாளர்கள் (Finance Managers) $ 100,000
பொறியியல் மேலாளர்கள் (Engineering Managers) $ 100,000

கனடாவில் மேலாண்மை நிபுணராக பணிபுரியக் கருதப்படும் தேர்வுக் காரணிகள்: 

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான குறிப்பிட்ட தகுதி வரம்புகள் எதுவும் இல்லை, இருப்பினும் ஏதேனும் ஒரு துறையில் கல்வி பட்டம் மற்றும் பணி அனுபவம் தேவைப்படலாம். பொதுவாகத் தேவைப்படும் தகுதிகள் கீழுள்ளவாறு… 

  1. மேல்நிலைப் பள்ளியை (Higher Secondary Schooling) நிறைவு செய்வது பொதுவாக தேவைப்படுகிறது
  2. டிப்ளோமா (Diploma) அல்லது தொழிற்கல்விச் சான்றிதழ் (Vocational certificate) தேவைப்படலாம். வணிகம் (Business), மேலாண்மை (Management), கட்டுமானம் (Construction), அறிவியல் (Science) அல்லது தொழில்நுட்பப் (Technology) பின்னணி உதவும்.
  3. 1-3 ஆண்டுகள் பணி அனுபவம் (work experience), துறையின் சில பகுதிகளில் பணிபுரிய மேற்பார்வையாளராய் இருந்த பணிஅனுபவம் தேவைப்படலாம்

 

மேலாண்மை நிபுணத்துவ அங்கீகாரங்களை வழங்கும் கனேடிய நிறுவனங்கள் பல இருக்கும் பட்சத்தில், ​​வேலையைப் பெறுவதற்கு ஒரு சான்றிதழ் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, இருப்பினும் அது உதவக்கூடும். மிக முக்கியமானது, உங்கள் தகுதிகள் கனேடிய சமநிலைக்கு (Canadian standard equivalency) மதிப்பீடு செய்யப்படுகின்றன, எனவே கனேடிய தரத்திற்கு (Canadian standards) தகுதியுள்ள ஒருவரை அவர்கள் தேர்வுசெய்கிறார்கள் என்பதை முதலாளிகள் அறிவார்கள். ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பித்திருந்து அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட சான்றிதழ் வேண்டும் என்றால், CanApprove ஐ தொடர்பு கொள்ளுங்கள், எங்கள் நிபுணர் குழு உங்களுக்கு உதவும்.

 

கனடாவில் ஒரு மேலாண்மை நிபுணராகத் தேவைபடும் கல்வித்தகுதிகள்: 

பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மேலாண்மைப் படிப்பை ஒரு முதுகலைத் திட்டமாக வழங்குகின்றன, ஏனெனில் மேலாண்மை நிபுணத்துவம் பல வணிக அடிப்படைகளை ஒன்றாக இணைக்கிறது. 

இதைப் படிக்க அனுமதி பெற குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டு டிப்ளோமா அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு சர்வதேச மாணவர்களுக்கு IELTS-ல் சராசரியாக 6.5 மதிப்பெண் தேவைப்படுகிறது. 

கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்கள் இலவச ஆன்லைன் விசா மதிப்பீட்டுச்சேவையை (CRS Calculator) பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

மேலாண்மை நிபுணராக நீங்கள் கனடாவிற்கு குடியேற எங்கள் குழு என்ன செய்யும்? 

கனேடிய குடியேற்றத்தின் உங்கள் செயல்முறையைத் தொடங்குவதற்கான சிறந்த வழி, விரிவான தரவரிசை முறையை (Comprehensive Ranking System) பயன்படுத்தி எக்ஸ்பிரஸ் என்ட்ரிக்கான (Express Entry) உங்கள் கனடா குடியேற்ற புள்ளிகளைக் கணக்கிடுவது. 

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி ப்ரொபைல், வயது, பணி அனுபவம், கல்வி, இங்கிலிஷ் அல்லது பிரஞ்சு மொழிகளில் தேர்ச்சி போன்ற காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றது. இவை தவிர, துணைவரின் தகவமைப்பு திறன் (spouse’s adaptability), பொருந்தினால் கூடுதல் CRS புள்ளிகளையும் பெறலாம். 

இம்மிகிரேசன், ரெபியூஜி, சிடிசென்ஷிப் கனடா (IRCC) இரு வாரங்களுக்கு ஒரு முறை எக்ஸ்பிரஸ் என்ட்ரி நியமனங்களை நடத்துகிறது. 

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி விண்ணப்பத்தின் விளைவாக கனேடிய குடிவரவிலிருந்து ஒரு ITA (விண்ணப்பிக்க அழைப்பு) கிடைத்ததும், கனடாவில் பர்மனண்ட் ரெசிடென்ஸிற்கான (Permanent Residency) முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 60 நாட்கள் கிட்டும். இதற்குள் நீங்கள் விண்ணப்பிக்கலாம். 

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி ப்ரொபைல் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையை முன்னெடுத்துச்செல்வதை உறுதி செய்வது அவசியமாகிறது. உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி CRS மதிப்பெண்களை அதிகரிக்கக் CanApprove ஐ தொடர்பு கொள்ளவும்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்http://bit.ly/PR-VISA

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்