Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

பிரிட்டிஷ் கொலம்பியா : குடிபெயர கனவுள்ளவர்களுக்கு கனடா ஓர் உகந்த நாடு!

பிரிட்டிஷ் கொலம்பியா

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் இயற்கை அழகை பற்றி இவ்வுலகு அறியும்.

இந்த  மாகாணம் அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் வனப்பகுதியின் பரந்த பகுதிகளை கொண்டிருப்பதால் இங்கு பயணிப்பவர்களுக்கு விருப்பமான இடமாக அமைகிறது. ஆனால் கனடா குடியேற்ற ஆர்வலர்களைப் பொறுத்தவரை, மாகாணத்தின் பன்முக கலாச்சாரங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குடிபெயர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளது. விக்டோரியா, மாகாணத்தின் தலைநகராகவும் மற்றும் வான்கூவர் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், வாழ்வதற்கும் அனைத்து வகையிலும் சிறந்த இடமாக உள்ளது. இந்த மாகாணம் ஒரு வலுவான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் குடியிருப்போர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  குடிபெயர்பவர்களுக்கு பிடித்த  இடமாக மாற்றும் முக்கிய காரணிகளை இப்போது பார்கலாம்.

 

உயர் வாழ்க்கைத் தரம்:

உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவை புலம்பெயர்ந்தோருக்கு பிடித்த இடமாக மாற்றுவது உயர் வாழ்க்கைத் தரம்தான்.

 

சிறந்த சுகாதாரம்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிப்பவர்கள் மருத்துவ சேவைகள் திட்டம் (MSP) என்ற பெயரில் ஒரு பிரத்யேக சுகாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளனர். இந்த திட்டத்தில் பதிவுசெய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சிறந்த சுகாதார சேவையை பிரிட்டிஷ் கொலம்பியா உறுதி செய்கிறது.

 

அதிக ஊதியங்கள் மற்றும் பிற சலுகைகள்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் அதிக சம்பளத்தைப் பெறுகிறார்கள். முதலாளிகள் ஊழியர்களுக்கு பல்வேறு சுகாதார மற்றும் பிற சலுகைகளையும் வழங்குகிறார்கள். இருப்பினும், ஒரு நபரின் சம்பளம் அவர்களின் வேலை, கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தது.

 

பன்முக கலாச்சாரம்:

பிரிட்டிஷ் கொலம்பியா என்பது பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வரும் நபர்கள் ஒன்றாக வாழும் இடமாகும். இந்த மாகாணத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், பார்வையாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளனர். இது பிரிட்டிஷ் கொலம்பியாவை கலாச்சார பன்முகத்தன்மையின் இடமாக மாற்றுகிறது.

 

பல வாய்ப்புகள்:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு தொழில் துறைகளில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

 

பாதுகாப்பு:

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குற்ற விகிதம் மிகக் குறைவு மற்றும் சட்டங்களும் மிகவும் வலுவானவை. இது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை வேலை செய்வதற்கும், பாதுகாப்பாக வாழ்வதற்கும் ஒரு நல்ல இடமாக மாற்றுகிறது.

 

அடுத்த 20 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 903,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 77% வேலைகளுக்கு இரண்டாம் நிலை மட்டத்திற்கு மேல் கல்வித் தகுதி தேவைப்படும். பிரிட்டிஷ் கொலம்பியா திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வை ஊக்குவிக்கிறது, ஏனெனில் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புகள் அவசியம்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், திறமையான தொழிலாளர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு குடிபெயர, அவர்கள் மாகாணத்தில் ஒரு தொழில் நிறுவனத்திடமிருந்து நிரந்தர வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நியமன திட்டத்தின் (BC PNP) கீழ் திறமையான தொழிலாளர்களுக்கான குடியேற்ற திட்டங்களில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியாவின் திறன் குடிவரவு பதிவு அமைப்பு (SIRS) உடன் பதிவு செய்ய வேண்டும்.

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில்  நிரந்தரக் குடியுரிமை பெற  முக்கிய பாதைகள் பின்வருமாறு:

 

ஸ்கில்ட் இம்மிகிரேஷன் : பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக தேவை உள்ள தொழில்களில் தனித்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான பாதை இது. கனடாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு  மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின்  அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழைக்கும் திட்டம் இது. விண்ணப்பம் மற்றும் பதிவு செயல்முறைகள் முற்றிலும் ஆன்லைன்மயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிட்டிஷ் கொலம்பியா :  பிரிட்டிஷ் கொலம்பியாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் தகுதியான தனித்திறன் கொண்ட தொழிலாளர்களை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விரைவாக குடிபெயர உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கூட்டாட்சி பொருளாதார குடிவரவு திட்டங்களில் ஒன்றிலும்  தங்களை தகுதியுள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில் வேட்பாளரின் தகுதி தீர்மானிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி அனுபவம் தேவையில்லை என்றாலும், விண்ணப்பதாரர்களுக்கு தேவையான பணி அனுபவம் கட்டாயமாகும். கல்வி மற்றும் மொழி தொடர்பான தகுதித் தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

 

பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் :  பிரிட்டிஷ் கொலம்பியா தொழில்நுட்ப பைலட் திட்டம் ஒரு குடியேற்ற பாதையாகும்,

இது மாகாணத்தின் தொழில்நுட்ப துறைகளில்  தனித்திறன் கொண்டவெளிநாட்டு தொழிலாளர்களை அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர் இத்திட்டத்தின் கீழ் உள்ள 29 தகுதியான தொழில்கள் ஏதேனுமொரு பிரிட்டிஷ் கொலம்பியா தொழில் நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்புச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்புச்சான்றிதழ்  குறைந்தபட்சம் ஒரு வருடம் காலவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் வேட்பாளரின் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் குறைந்தது 120 நாட்களுக்கு செல்லும்படி இருக்க வேண்டும்.

 

தொழில் முனைவோர் குடியேற்றம் : பிரிட்டிஷ் கொலம்பியாவின்  இத்திட்டம் அங்குள்ள பிராந்திய சமூகங்களில் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கானது.

 

நீங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய இடம் பிரிட்டிஷ் கொலம்பியா என்று நினைக்கிறீர்களா? பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் கனடா குடியேற்றம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், எங்கள் அனுபவம்மிக்க கனடா குடிவரவு ஆலோசகர்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: http://bit.ly/bc_migrate

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Send Us An Enquiry

Enter your details below and we'll call you back when it suits you.




    [honeypot 953b1362b63bd3ecf68]





    Enquire Now Call Now