Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

மனிடோபாவில் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலம் காத்திருக்கிறது!

Manitoba Tamil Blog

மனிடோபா மாகாண நியமனத் திட்டம் (எம்.பி.என்.பி) என்பது மாகாண வாரியாக விண்ணப்பிக்க உதவும் மாகாண விண்ணப்பதாரர் திட்டமாகும். 1998 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்.பி.என்.பி மூலம் மனிடோபாவுக்கு நிரந்தரமாகக்  குடிபெயர்ந்துள்ளனர். add this மனிடோபா குடியேற்றம்

கனடாவுக்கு குடிபெயர விரும்புவோர் மனிடோபாவை நேசிப்பதற்கான காரணங்கள் பல. இவற்றில் மிக முக்கியமானது மாகாணத்தின் அழகிய நிலப்பரப்பு மற்றும் ஏற்புடைய காலநிலை. குளிர்காலத்தில் கூட மனிடோபா மிகவும் வெப்பமான பகுதியாக உள்ளது. இந்த அழகான மாகாணத்தின் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நகரங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உத்தரவாதம் அளித்து அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன.

PNP Finder

மனிடோபாவிற்கு புதியவர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணி குறைந்த வாழ்க்கைச் செலவு ஆகும். டொராண்டோ போன்ற நகரங்களில் வசிப்பதை ஒப்பிடும்போது, ​​வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவாக இருப்பதால் மனிடோபாவில்  அதிக பணத்தை சேமிக்க முடியும்.  தவிர, மனிடோபா சிறந்த வேலை வாய்ப்புகள், தரமான கல்வி மற்றும் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மனிடோபா இலவச, ஆனால் தரமான மருத்துவம் மற்றும் ஆரம்பக் கல்வியையும் வழங்குகிறது.

மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக், நிறைய வேலை வாய்ப்புகளையும், தரமான கல்விக்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. வாழ்க்கைச் செலவுகள் மிகக் குறைவாக இருப்பதால், வெளிநாட்டிற்குக் குடியேற விருப்பப்படுபவர்கள் இங்கு குடியேற விரும்புகிறார்கள். வெவ்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்கள் மனிடோபாவில் அமைதியான சகவாழ்வில் வாழ்கின்றனர். 200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளைக் கற்கவும், இங்குள்ள சமூகத்துடன் நன்கு ஒருங்கிணைக்கவும் புதியவர்களுக்கு உதவ மாகாண அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

மனிடோபா மாகாண நியமன திட்டம்

மனிடோபா மாகாண நியமனத் திட்டம் மாகாணத்தின் பிரத்தியேக பொருளாதார நலன்களின் அடிப்படையில் மாகாண நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மனிடோபா மாகாண நியமன திட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன:

  1. மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு
  2. திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு
  3. சர்வதேச கல்வி பிரிவு
  4. வணிக முதலீட்டாளர் பிரிவு

 

மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு

மனிடோபா திறமையான பணியாளர் பிரிவு, மாகாணத்தில் முதலாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிடோபா மாகாணத்தில் முதலாளிகளுக்குத் தேவையான திறன்களைக் கொண்ட குடியேற்ற விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்து கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு பரிந்துரைக்க உதவுகிறது. மாகாணத்துடன் முந்தைய இணைப்புகள் ஏதேனும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இந்த பிரிவின் கீழ் முன்னுரிமை இருக்கும். இப்பிரிவின் கீழ் இரண்டு வகுப்புகள் உள்ளன:

  • மனிடோபா பணி அனுபவம் வகுப்பு
  • முதலாளி நேரடி ஆட்சேர்ப்பு வகுப்பு

 

திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு

திறமையான பணியாளர் வெளிநாட்டு பிரிவு ஒரு எக்ஸ்பிரஸ் நுழைவு பாதை மற்றும் நேரடி மாகாண பாதையை கொண்டுள்ளது. இந்த பிரிவு மாகாணத்தின் மிகவும் தேவைப்படும் தொழில்களில் பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களை குறிவைக்கிறது. இந்த பிரிவில் கூட வேட்பாளர் மாகாணத்துடன் முந்தைய இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

மனிடோபாவில் வேலை அல்லது கல்வி அனுபவம் உள்ளவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்-கனேடிய குடிமகன் அல்லது நிரந்தர வதிவாளர் – மனிடோபாவில் வசிப்பவர்கள் இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். மொழித் தேர்ச்சி மற்றும் சரியான திறமை மற்றும் பயிற்சியுடன் இருப்பவர்களுக்கு இந்த பிரிவு முன்னுரிமை அளிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் உள்ள இரண்டு வகுப்புகள்:

  • மனிடோபா எக்ஸ்பிரஸ் நுழைவு வகுப்பு
  • மனித மூலதன வகுப்பு

 

சர்வதேச கல்வி பிரிவு

சர்வதேச கல்வி பிரிவு என்பது மனிடோபாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான குடியேற்ற பாதையாகும். இப்பிரிவு மூன்று வகுப்புகளைக் கொண்டுள்ளது:

  • தொழில் வேலைவாய்ப்பு வகுப்பு
  • பட்டதாரி வேலைவாய்ப்பு வகுப்பு
  • மாணவர் தொழில்முனைவோர் வகுப்பு

 

வணிக முதலீட்டாளர் பிரிவு

MPNP இன் வணிக முதலீட்டாளர் பிரிவு தகுதியான சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை குறிவைக்கிறது. இந்த பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மனிடோபா ஒரு தற்காலிக பணி அனுமதி அளிக்கிறது.

விண்ணப்பதாரர் ஒரு புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் அல்லது மனிடோபாவில் ஏற்கனவே உள்ள ஒரு வணிகத்தைப் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக நடத்த வேண்டும். வணிக செயல்திறன் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் அவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்தால், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பிரிவின் கீழ் உள்ள வகுப்புகள்:

 

  • பண்ணை முதலீட்டாளர் வகுப்பு
  • தொழில் முனைவோர் வகுப்பு
  • மோர்டன் சமூக உந்துதல் குடிவரவு முயற்சி

 

மனிடோபா குடியேற்றம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? உங்களுக்கு மிகவும் சாத்தியமான கனடா குடியேற்ற பிரிவு எது என்று குழப்பமடைகிறீர்களா? இப்போதே CanApprove இன் சிறந்த, நிபுணத்துவம் வாய்ந்த குடிவரவு ஆலோசகர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

வாட்ஸ்அப்:http://bit.ly/2vcxjcN

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)



en*****@ca********.com











 
க்கு மின்னஞ்சல் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Send Us An Enquiry

Enter your details below and we'll call you back when it suits you.




    [honeypot 953b1362b63bd3ecf68]





    Enquire Now Call Now