Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு

ஆல்பர்ட்டா PNP மூலம் உங்கள் கனடா கனவை நினைவாக்குங்கள்

கனடாவின் மிக சிறந்த மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டாவிற்கு குடிபெயர உலகெங்கிலும் உள்ளவர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். கனடாவின் இந்த மேற்கு மாகாணம் குடிபெயர்ந்தவர்களுக்கு மத்தியில் பிரபலமடைய வலுவான பொருளாதாரம், ஏராளமான வேலை வாய்ப்புகள் மற்றும் அழகான நிலப்பரப்புகள் ஒரு  முக்கிய காரணிகளாக உள்ளன. ஆல்பர்ட்டா மாகாணத்தில், கனடாவின் இரு முக்கிய நகரங்களான எட்மோண்டன் மற்றும் கேல்கரி  அமைந்துள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணம் இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது மேலும் கனடாவின் ஆற்றல் மாகாணம் என்று எல்லோராலும் பிரபலமாக அறியப்படுகிறது. ஆல்பர்ட்டா மாகாணத்தில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறை, படித்த மற்றும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் என உறுதியளிக்கிறது. இதைத்தவிர, ஆல்பர்ட்டாவில் வசிப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளிலிருந்து  தொழில் தொடங்க வருபவர்களுக்கு  மாகாணத்தில் குடிபெயர்வதற்கு சாதகமான சூழலைத் தக்கவைக்க ஆல்பர்ட்டா அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

புதிதாக குடிபெயர்பவர்கள், ஆல்பர்ட்டா சமூகத்துடன் நன்கு ஒருங்கிணைக்க உதவும் வகையில் மாகாணத்தின் அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய, திறமை வாய்ந்த தொழில் துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பட்டம் பெற்ற தொழில் நுட்ப துறைகளை சார்ந்திடாத தொழிலாளர்களையும் ஆல்பர்ட்டா மாகாணம் அழைக்கிறது.

 

ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் குடிபெயர்பவர்களுக்கு மிகவும் கவரும்  காரணியாக உள்ளது. அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள், குறைந்த வரி விகிதங்கள், அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை ஆல்பர்ட்டாவை கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் பிற முக்கிய காரணிகளாகும்.

ஆல்பர்ட்டா மாகாண பரிந்துரை திட்டம்

கனடா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆல்பர்ட்டா மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான  அனுமதி வழங்குகிறது. ஆல்பர்ட்டா மாகாணம்,  நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்ககூடிய  திறன்கள் மற்றும் தகுதிகள் கொண்ட நபர்களை “ஆல்பர்ட்டா குடியேற பரிந்துரைக்கப்பட்ட திட்டம் (AINP)” மூலம் வரவேற்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று முக்கிய குடியேற்ற பிரிவுகள் உள்ளன

  1.  ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு
  2.  ஆல்பர்ட்டா வாய்ப்புகள் பிரிவு
  3.  ஆல்பர்ட்டா சுயதொழில் உழவர் பிரிவு 

 

ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு

ஆல்பர்ட்டாவிலிருந்து, ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்புடன் ஏற்கனவே ஒரு சுயவிவரத்தை உருவாக்கியவர்கள்  ஆல்பர்ட்டா எக்ஸ்பிரஸ் நுழைவு பிரிவு வழியாக மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்கலாம். பெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவிலிருந்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை குடிபெயர விண்ணப்பிக்க மாகாணம் அனுமதியளிக்கிறது. ஆல்பர்ட்டா குடிபெயர விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் CRS 300 மதிப்பெண்கள் கட்டாயமாக பெற வேண்டும். இவ்வழியிலேயே ஆல்பர்ட்டா குடியேற பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மூலம் நபர்களை தேர்ந்தெடுக்கிறார்கள.

ஆல்பர்ட்டாவில் குடிபெயரவிருக்கும் விண்ணப்பாதரர்களுக்கு, அங்கு பணி நியமன சான்றிதழோ, மாகாணத்தில் பணி புரிந்த அனுபவமோ, அல்பேர்ட்டாவில் உள்ள ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பட்டம் அல்லது மாகாணத்தில் வசித்து வரும் நெருங்கிய உறவினர்கள் மேற்கண்டவை மூலமாகவோ குடிபெயர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த மாகாண அழைப்பை ஏற்று வெற்றிகரமாக விண்ணப்பிப்பவர்கள் 600 CRS மதிப்பெண்களை பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் அடுத்தடுத்த பெடரல் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் விண்ணப்பித்து  கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற உதவுகிறது.

ஆல்பர்ட்டா வாய்ப்புகள் பிரிவு

பணி அனுமதியுடன், ஆல்பர்ட்டாவில் நிரந்தர குடிபெயர்ப்புக்குத் தகுதியான தொழில் புரிந்து கொண்டு தற்காலிகமாக வசிக்கும் ஒருவர் ஆல்பர்ட்டா வாய்ப்பு பிரிவு மூலம் மாகாணதில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிக்கலாம்.. இந்த பிரிவின் கீழ் தகுதி பெற விண்ணப்பதாரர் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் CLB  4-க்கு சமமான மொழி புலமையை பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் ஆல்பர்ட்டாவின் பணி நியமன சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

 

ஆல்பர்ட்டா சுயதொழில் உழவர் பிரிவு

விவசாயத்தில் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் ஆல்பர்ட்டாவிலிருந்து சுயதொழில் செய்பவர் உழவர் பிரிவு மூலம் மாகாணத்திற்கு குடிபெயர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச தனிப்பட்ட நிகர மதிப்பு $5,00,000 இருக்க வேண்டும் மற்றும் கனடாவில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆல்பர்ட்டாவுக்கு நிரந்தரமாக குடிபெயருவது பற்றி மேலும்தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? CanApprove- வின் மிகக் திறமையான குடியேற்ற ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். கனடாவில் குடிபெயர்வது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும் உதவிகளுக்கும் எங்களை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: http://bit.ly/alberta_migrate

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)



en*****@ca********.com











 
க்கு மின்னஞ்சல் செய்யவும்