சென்டர் ஆப் செக்யூரிட்டி அண்ட் எமெர்ஜிங் டெக்னாலஜி (Center of Security and Emerging Technology) மையம் வெளியிட்டுள்ள ஆய்வின் படி, ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் இன்போர்மேஷன் டெக்னாலஜி (Information Technology) வல்லுநர்கள் குடியேற கனடா சிறந்த நாடு என்று அறியப்பட்டுள்ளது. AI மற்றும் IT இல் திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நுழைவு மற்றும் நிரந்தர வதிவிடத்திற்கான பாதைகளை கனடா வழங்குகிறது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கிடையில், குடியுரிமை பெறுவது (வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்வோர்) எவ்வாறு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் போட்டித்தன்மையுடன் செயலாக்கம் செய்ய உதவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நன்மை கனடாவுக்கு மிகவும் திறமையான AI மற்றும் IT துறையில் உள்ள தொழிலாளர்களை ஈர்க்கவும், வரும் ஆண்டுகளில் ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸில் கனடா உலகிலாவியத்தலைமை வகிக்க உதவும் என்று ஆய்வு கணித்துள்ளது. மாண்ட்ரீல் முதல் வான்கூவர் வரை (From Montreal to Vancouver) நாடு முழுவதும் செயல்படும் உலகின் முன்னணி AI நிறுவனங்கள் கனடாவில் உள்ளது.
IT நிபுணர்களுக்கு கனடா ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது?
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒர்க் விசாவின் கால வரம்புகள் மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை உள்ளன. ஒர்க் விசா (work visa) புதுப்பித்தல்களின் எண்ணிக்கையிலும் ஒரு குறிப்பிட்ட கால வரம்பு உள்ளது. ஆனால் கனடாவில் பணி அனுமதியின் காலம் வேலை வழங்கும் முதலாளியால் தீர்மானிக்கப்படுகிற காரணத்தால் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்கும் வரம்பு ஏதும் இல்லை. இதுவே கனடாவை வெளிநாடு வாழ் மக்கள் பெர்மனெண்ட் அல்லது ஒர்க் விசா (Permanent Residence Visa or Work Visa) பெரும் பிற நாடுகளிடமிருந்து வேறு படுத்திக்காட்டுகிறது.
இரண்டாவதாக, மற்ற இரண்டு நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் ஒர்க் அனுமதிகளுக்கான செயலாக்க நேரம் குறைவாக உள்ளது. கனடாவில், ஒர்க் விசா செயலாக்க நேரம் வெறும் 2-8 வாரங்கள் மட்டுமே ஆகும், மற்ற நாடுகளில், ஒருவர் ஒர்க் விசா பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
தவிர, கனடா வெளிநாடு வாழ் மக்களுக்கு எந்த வித இடைவேலையுமின்றி ஆண்டு முழுவதும் பணி அனுமதி அளிக்கிறது, ஆனால் அமெரிக்காவில், H1-B விசா விண்ணப்பதாரர்கள் நெடுமாதங்கள் காத்திருக்கக்கூடும்.
மேலும், ஒர்க் விசா அல்லது பணி அனுமதி (work permit) உள்ள தொழிலாளர்கள் பர்மனண்ட் விசாவிற்கு உடனடியாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் ஒரே நாடு கனடா மட்டுமே. மற்ற எல்லா நாடுகளிலும் காத்திருப்பு நேரம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாறுபடும்.
IT தொழிலாளர்கள் கனடாவில் பெர்மனண்ட் விசா பெறக்கூடிய வழிகள்
100+ க்கும் மேற்பட்ட குடியேற்றப்பாதைகளையும், திட்டங்களையும் கனடா செயல்படுத்திவருகிறது. ஸ்கில்டு ஒர்க்கர்களுக்கான முக்கிய பாதை எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) ஆகும். இது கனடாவின் நான்கு முக்கிய பொருளாதார குடிவரவுத் திட்டங்களின் கீழ் பெர்மனண்ட் விசாவிற்கான விண்ணப்பங்களை நிர்வகிக்கிறது.
விண்ணப்பங்கள் விரிவான தரவரிசை அமைப்பின் (Comprehensive Ranking System) அடிப்படையில் செயலாக்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பங்களின் செயலாக்கம் முடிவு பெற ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். ப்ரொவின்சியால் நாமினேஷன் மற்றொரு குடியேற்றத் திட்டமாகும். இதன் கீழ் கனேடிய மாகாணங்கள் நிரந்தர வதிவிடத்திற்குத் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகளுடன் உள்ள குடியேற்ற வேட்பாளர்களை (Immigrantion applicants) பரிந்துரைக்க முடியும்.
ஒன்டாறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா (Ontario and British Columbia) போன்ற மாகாணங்களில் வெளிநாட்டு IT தொழிலாளர்களுக்கான பிரத்யேக குடியேற்ற திட்டங்கள் உள்ளன. ஒன்டாறியோ டெக் பைலட் (Ontario Tech Pilot) என்பது ஆறு தொழில்நுட்ப தொழில்களில் ஏதேனும் ஒன்றில் பணி அனுபவம் உள்ள தொழிலாளர்களுக்கானது.
அதே நேரத்தில், பிரிட்டிஷ் கொலம்பியா டெக் பைலட் (British Columbia Tech Pilot) 29 தொழில்நுட்ப தொழில்களில் ஏதேனும் ஒன்றில் பணி அனுபவம் உள்ள வேட்பாளர்களை குறிவைக்கிறது.
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கனடாவின் குளோபல் டேலண்ட் ஸ்ட்ரீம் (Global Talent Stream), சர்வதேச தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பணி விசாக்களை வழங்குகிறது.
AI மற்றும் IT தொழில் வல்லுநர்கள் செழிக்க கனடா மிகுந்த தொழில் திட்டங்களை வழங்குகிறது. கனடாவில் பெர்மனண்ட் விசா பெற உங்கள் வாய்ப்புகளை பற்றி மேலும் அறிய இப்போது CanApprove ஐ தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் மட்டற்ற சேவை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள
வாட்ஸ்அப்: bit.ly/PR-VISA
அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)
enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்