Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: Architect

நான் ஒரு ஆர்க்கிடெக்டாக கனடாவுக்கு குடியேற முடியுமா?

நீங்கள் ஒரு ஆர்க்கிடெக்டாக (Architect) கனடாவுக்கு குடிபெயர விரும்பினால், அதிர்ஷ்டசாலி தான்! கனடா முழுவதும் ஆர்க்கிடெக்ட்களுக்கு தேவை உள்ளது, மேலும் நீங்கள் வேலை வாய்ப்போடும் அல்லது இல்லாமல் கனேடிய பர்மனண்ட் விசாவைப் (PR) பெற முடியும். ஒருவர் கட்டிடக்கலைஞராக பணிபுரிந்திருக்கும் பட்சத்தில் கனடாவிற்கு குடியேறும் தகுதியை அவர் பெறுகிறார். 

ஆர்க்கிடெக்டாக கனடாவுக்கு குடிபெயருங்கள்

கனடாவில் NOC பட்டியலில் உள்ள ஒவ்வொரு தொழில் வகைப்பாட்டிற்கும் ஒரு குடியேற்றக் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனடாவுக்கு ஒரு ஆர்க்கிடெக்டாக குடியேற விரும்புவோருக்கான குறியீடு 2151 ஆகும்.

canada Pnp finder

இது தொழில்துறை ஆர்க்கிடெக்ட்டுகளுக்கான NOC குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு ஆர்க்கிடெக்டாக கனடாவிற்குக்  குடிபெயர பல வழிகள் உள்ள போதிலும், உங்கள் கனடா விசாவை பெறுவதை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொள்வது அவசியமாகிறது.

கனடாவில் ஆர்க்கிடெக்ட்டுகளுக்கான தேவை மிகப் பெரியதாக இருப்பதால் கனேடிய அரசாங்கத்தின் குடிவரவு திட்டத்தின் கீழ் கனடா PR விசாவிற்கு விண்ணப்பிக்க ஆர்க்கிடெக்ட்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் தொழில் பட்டியலில் ஆர்கிடெக்ட்டுகளையும் சேர்த்துள்ளனர், எனவே  ஆர்கிடெக்ட்டாக பணிபுரிவோர் கனடாவிற்கு குடிபெயர வாய்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளது  

NOC இல் உள்ள ஆர்க்கிடெக்ட்டுகளுக்கான குறியீடு 2151 ஆகும். கனடாவில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஆர்வம்கொண்டிருக்கும் ஆர்க்கிடெக்ட்களுக்கு இது ஒரு  நற்செய்தி. 

எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்றல் என்ன?

கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது விசா வகுப்பு அல்ல, இது பர்மனண்ட் விசாவிற்கு சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கனேடிய குடிவரவு துறை பயன்படுத்தும் ஒரு முறை (அல்லது தரவுத்தளம்).

அதில் ப்ரொபைல் க்ரியேட் செய்வதன் மூலம் நமது விவரங்களை கனேடிய அரசாங்கத்திற்குத் தெரிய படுத்திகின்றோம். நாம் குடிபெயர தகுதி வகிக்கின்றோம் என அறியப்படும் பட்சத்தில், கனடா, நாம் விண்ணப்பிக்க அழைப்பிதழை அனுப்பும். அதன் பின் நாம் ஆயத்தப்பணிகளை தொடரலாம்.

கனடாவுக்கு குடியேற விரும்பும் ஒரு ஆர்க்கிடெக்ட் (அல்லது  எந்த துறையில் உள்ளவராயினும்) பெடரல் ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் அல்லது ப்ரொவினிசியல் நாமினி ப்ரோகிராம் போன்ற திட்டங்களின் மூலம் கனடாவில் பர்மனண்ட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

பெடரல் ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் ப்ரோகிராம் (FSW) என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் திறமை வகித்திருக்கும் ஒருவர் பனி அனுபவத்துடன் இருந்து கனடாவில் விசா வாங்கி குடியேற வேண்டும் என்று என்னம் கொண்டிருந்தால், அவர் குடியேற கனடா ஏற்படுத்திய திட்டமாகும்.

அதேபோல், ப்ரொவின்சியல்  நாமினி ப்ரோக்ராம் (PNP) என்பது, கனடாவில் உள்ள ப்ரொவின்சஸ் மற்றும் டெரிடெரிகள் தங்களுக்கு தேவைப்படும் துறைகளில் உள்ள  தகுதிவாய்ந்த நபர்களை தாமே  குடிபெயர பரிந்துரை செய்ய முன்வரும் திட்டமாகும். இதில் பதிவு செய்ய ப்ரொவின்சஸ் மற்றும் டெரிடெரிகள் தங்களின் வலைத்தளங்களை வைத்துள்ளது. அதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதை பற்றி மேலும் அறிய எண்களின் அதிகாரபூர்வ ப்ரொவின்சியல்  நாமினி ப்ரோக்ராம் (PNP Finder) சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளவும்.  

NOC 2151 இன் கீழ் பணிபுரிய கனடா செல்ல விரும்பும் ஆர்க்கிடெக்டுகள் கீழ்காணும் வேலைகளின் கீழ் பணியமர்த்தப்படலாம்:

  • கட்டிட வடிவமைப்பாளர் (Architect)
  • கட்டிடக்கலை தரநிலை நிபுணர் (Architectural Standards Specialist)
  • தலைமை ஆர்க்கிடெக்ட் (Chief Architect)
  • ஆலோசகர் ஆர்க்கிடெக்ட் (Consulting Architect)
  • தொழில்துறை மற்றும் வணிக கட்டிடங்கள் ஆர்க்கிடெக்ட் (Industrial and commercial building architect)
  • குடியிருப்பு ஆர்க்கிடெக்ட் (residential architect)

Canada CRS point

கனடாவில் ஆர்க்கிடெக்டுகளுக்கான ஊதியம்

ஆர்க்கிடெக்ட்களை உள்ளடக்கிய இயற்கை மற்றும் பயன்பாட்டுத் தொழில்முறை தொழில்களுக்கான ஒரு மணிநேர சராசரி ஊதிய விகிதம் $43.86 ஆகும்.

2020 – ல், ஆர்க்கிடெக்டுகளின் சராசரி வார ஊதிய விகிதம் $1,634 என்று அறியப்பட்டுள்ளது,  இது தோராயமாக ஆர்கிடெக்ட்டுகளுக்கு $85,000-தை முழுநேர வருடாந்திர சம்பளமாக அளிக்கிறது.

ஆர்க்கிடெக்டுகளுக்கு , மாகாண வாரியாக ஒரு மணி நேர ஊதியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டா (Alberta) $41.35
பிரிட்டிஷ் கொலம்பியா  (British Columbia)  $30.29
மனிடோபா (Manitoba) $35.00
நியூ பிரன்சுவிக் (New Brunswick)  $34.62
நோவா ஸ்கோஷியா (Nova Scotia)  $32.21
ஒண்டாரியோ (Ontario)  $31.39
பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட்  (Prince Edward Island)  $31.79
கியூபெக்  (Quebec) $35.00
சாஸ்கட்சேவான்  (Saskatchewan)  $31.79

ஒரு ஆர்க்கிடெக்டாக கனடாவுக்கு குடிபெயர தேவையான தகுதிகள்

  • கனடாவின் ராயல் ஆர்கிடெக்சரல் இன்ஸ்டிடியூட் (RAIC) இன் அங்கீகாரம் பெற்ற கட்டிடக்கலை பள்ளியில் இருந்து இளங்கலை பட்டம் அல்லது படிப்புகளின் பாடத்திட்டத்தை முடித்தல்
  • கட்டிடக்கலையில் முதுகலை பட்டம் தேவைப்படலாம்
  • பதிவுசெய்யப்பட்ட கட்டிடக் கலைஞரின் மேற்பார்வையின் கீழ் மூன்று ஆண்டு இன்டர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும்
  • ஆர்க்கிடெக்ட் பதிவுத் தேர்வை முடிக்க வேண்டும்

மேலும் அறிந்துகொள்ள க்ளிக் செய்யவும் 

ஒரு ஆர்க்கிடெக்டாக கனடாவுக்கு குடிபெயர்வது எப்படி?

உங்கள் கனேடிய பர்மனண்ட் ரெசிடென்ஸ் செயல்முறையின் முதல் கட்டம் காம்ப்ரிஹன்சிவ் ரேங்கிங் சிஸ்டம் (CRS) எனப்படும் விரிவான தரவரிசை முறையைப் பயன்படுத்தி எக்ஸ்பிரஸ் என்ட்ரிக்கான உங்கள் கனடா குடிவரவு புள்ளிகளைக் கணக்கிடுவது. 

CRS புள்ளிகள் வழங்கப்படும் காரணிகள் 

  • வயது (Age)
  • கல்வி தகுதிகள் (Educational Qualifications)
  • ஆங்கில திறன் (English ability)
  • பிரஞ்சு திறன் (French ability)
  • உங்கள் கணவர் அல்லது மனைவியின் திறன்கள்  (Your partner’s skills)
  • பணி அனுபவம் (Work experience)

 

உங்கள் CRS புள்ளிகள் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடப்படுகையில் 67 அல்லது அதிகமா இருத்தல் வேண்டும்.

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி விண்ணப்பத்தின் விளைவாக கனேடிய குடிவரவிலிருந்து ஒரு ITA (விண்ணப்பிக்க அழைப்பு) கிடைத்ததும், கனடாவில் பர்மனண்ட் ரெசிடென்ஸிற்கான (Permanent Residency) முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 60 நாட்கள் கிட்டும். இதற்குள் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி ப்ரொபைல் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையை முன்னெடுத்துச்செல்வதை உறுதி செய்வது அவசியமாகிறது. உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி CRS மதிப்பெண்களை அதிகரிக்கக் CanApprove ஐ தொடர்பு கொள்ளவும்.

உங்கள் எக்ஸ்பிரஸ் பதிவை நீங்கள் பதிவு செய்வதற்கு முன், PR விசாவிற்குத் தேவையானபடி உங்கள் தகுதிகள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்கும் செயல்முறையின் மூலம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்bit.ly/PR-VISA

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)



he******@ca********.com











க்கு மின்னஞ்சல் செய்யவும்.