Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

நிதி மேலாளர்களை அழைக்கிறது கனடா!

Finance manager

நிதி மேலாளர்கள் (Financial Managers)

நிதி மேலாளர்கள் நிதி மற்றும் கணக்கியல் துறைகளின் கொள்கைகளைத் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியமான பணிகளைச்செய்கின்றனர். நிதி மேலாளர்கள் செயல்திறன் தரங்களை நிறுவுவதோடு நிர்வாகத்திற்கு பல்வேறு நிதி அறிக்கைகளைத் தயாரிக்கிறார்கள். அவர்கள் தனியார் துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ள நிறுவனங்களில் நிதி மற்றும் கணக்கியல் துறைகளில் பணியாற்றுகின்றனர்.  

நிதி மேலாளராக ஒருவர் அமரக்கூடிய பணியிடங்கள்

  • இயக்குனர் – நிதி சேவைகள் (Director – financial services)
  • நிதி இயக்குனர் (Finance director)
  • பொருளாளர் (Treasurer)
  • உள் தணிக்கை சேவை மேலாளர் (Internal audit services manager)
  • நிதி நிர்வாகி (Financial administrator)

canada Pnp finder

முக்கிய கடமைகள் (Job responsibilities)

நிதி மேலாளர்கள் பல்வேறு கடமைகளை ஆற்றக்கூடும். அவை பின்வருமாறு….

  • ஒரு கணக்கியல் (accounting), தணிக்கை (Audit) அல்லது மற்றொரு நிதித் துறையின் (another financial department) செயல்பாட்டைத் திட்டமிடுதல் ஒழுங்கமைத்தல் கட்டுப்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல்
  • ஒரு நிறுவனத்தின் நிதிக் கொள்கைகள் (Financial Policies), அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கி செயலாக்கம் செய்தல்
  • நிதி அறிக்கைகள் (financial statements), சுருக்கங்கள் (summaries) மற்றும் பிற செலவு-பயன் (cost-benefit analysis) பகுப்பாய்வுகள் மற்றும் பிற ஆவணங்களைத் தயாரித்தல்
  • நிதி திட்டமிடல் மற்றும் பட்ஜெட் செயல்முறையை ஒருங்கிணைத்தல்
  • நிதி உருவகப்படுத்துதல் மாதிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை மேற்பார்வை செய்தல்
  • நிதி அறிக்கை முறைகள், கணக்கியல் நடைமுறைகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்தல்
  • மூத்த மேலாளர்கள் (senior managers) மற்றும் பிற துறைகளுக்கு நடைமுறைகள், இயக்க முறைமைகள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பிற நிதிக் கட்டுப்பாட்டு செயல்பாடுகளில் மாற்றங்களுக்கான பரிந்துரைகளைச் செய்தல்
  • பணியாளர்களை நியமித்தல், ஒழுங்கமைத்தல், பயிற்சி அளித்தல் மற்றும் நிர்வகித்தல்
  • நிறுவனத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கும், முதலீடு செய்யும் பொது மற்றும் வெளி நிதி ஆய்வாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுதல்
  • முதலீட்டு நடவடிக்கைகளுக்கான இலாபத் தரங்களை நிறுவுதல் மற்றும் இணைப்புகளைக் கையாளுதல்  

வேலைவாய்ப்புக்கான தகுதி

கனடாவில் ஒருவர் நிதி மேலாண்மை பணியாளராக வேண்டும் என்றால், அவர் கீழுள்ள தகுதிகளை வகித்திருத்தல் வேண்டும்

  • வணிக நிர்வாகம் (Business Administration), பொருளாதாரம் (economics), வர்த்தகம் (commerce) அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் தேவை.
  • வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் (concentration in finance) அல்லது மற்றொரு முதுகலை நிலை மேலாண்மை திட்டம் தேவைப்படலாம்.
  • கணக்கியல் (accounting), தணிக்கை (audit), பட்ஜெட், நிதி திட்டமிடல் (financial planning) மற்றும் பகுப்பாய்வு (financial analysis) அல்லது பிற நிதி நடவடிக்கைகளில் பல ஆண்டு அனுபவம் தேவை.
  • கணக்கியல் மற்றும் தணிக்கை மேலாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் பதவி தேவைப்படலாம் (CPA, CA, CPA, CMA or CPA, CGA)

நிதி மேலாளராக கனடாவிற்கு குடியேறுங்கள்

கனடாவில் NOC பட்டியலில் உள்ள ஒவ்வொரு தொழில் வகைப்பாட்டிற்கும் ஒரு குடியேற்றக் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனடாவுக்கு ஒரு நிதி மேலாளராக (Finance Manager)  குடியேற விரும்புவோருக்கான குறியீடு 0111 ஆகும்.

ஒரு நிதி மேலாளராக கனடாவிற்குக்  குடிபெயர பல வழிகள் உள்ள போதிலும், உங்கள் கனடா விசாவை பெறுவதை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொள்வது அவசியமாகிறது.

கனடாவில் நிதி மேலாளர்களுக்கான தேவை உள்ளதால் கனேடிய அரசாங்கத்தின் குடிவரவு திட்டத்தின் கீழ் கனடா PR விசாவிற்கு விண்ணப்பிக்க நிதி மேலாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். எனவே,  நிதி மேலாளராக பணிபுரிவோர் கனடாவிற்கு குடிபெயர வாய்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளது  

NOC இல் உள்ள நிதி மேலாளர்களுக்கான குறியீடு 0111 ஆகும்.

கனடாவில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஆர்வம்கொண்டிருக்கும் நிதி மேலாளர்களுக்கு இது ஒரு  நற்செய்தி.  

கனடாவில் நிதி மேலாளர்களின் ஊதியம்

கனடாவில் அனுபவமிக்க நிதி மேலாளர்கள் சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு $128000 வரை சம்பாதிக்கலாம். அதாவது ஒரு மணி நேரத்திற்கு $51.28 வருமானம் ஈட்ட முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை நிதி மேலாளர்கள் ஆண்டுக்கு $53,780 சம்பாதிக்க இயலும் என கூறப்படுகிறது.

ப்ரோவின்ஸ்களின் வாரியாக நிதி மேலாளர்களின் வருமானம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

 பிரோவின்ஸ்   நிதி மேலாளர்களுக்கான வருமானம்
ஆல்பர்ட்டா  $103,350 
 ஒன்டாரியோ   $101,829 
 மானிட்டோபா   $100,000 
 கியூபெக்   $96,875 
 சாஸ்கட்சிவான்   $91,392
 நோவா ஸ்கோஷியா   $81,698
 பிரிட்டிஷ் கொலம்பியா   $79,687

  நிதி மேலாளரராக கனடாவில் பர்மனண்ட் விசா (PR) பெறுவது எப்படி?

உங்கள் கனேடிய பர்மனண்ட் ரெசிடென்ஸ் (PR) செயல்முறையின் முதல் கட்டம் காம்ப்ரிஹன்சிவ் ரேங்கிங் சிஸ்டம் (CRS) எனப்படும் விரிவான தரவரிசை முறையைப் பயன்படுத்தி எக்ஸ்பிரஸ் என்ட்ரிக்கான உங்கள் கனடா குடிவரவு புள்ளிகளைக் கணக்கிடுவது.

 CRS புள்ளிகள் வழங்கப்படும் காரணிகள் 

  • வயது (Age)
  • கல்வி தகுதிகள் (Educational Qualifications)
  • ஆங்கில திறன் (English ability)
  • பிரஞ்சு திறன் (French ability)
  • உங்கள் கணவர் அல்லது மனைவியின் திறன்கள் (Your partner’s skills)
  • பணி அனுபவம் (Work experience)

 கனடா செல்வதற்கு நீங்கள் தகுதி உடையவரா என்று அறிந்து கொள்ள எங்கள் இலவச CRS கணக்கீடு மற்றும் PNP சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும். 

Canada CRS point

உங்கள் CRS புள்ளிகள் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடப்படுகையில் 67 அல்லது அதிகமா இருத்தல் வேண்டும்.

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி விண்ணப்பத்தின் விளைவாக கனேடிய குடிவரவிலிருந்து ஒரு ITA (விண்ணப்பிக்க அழைப்பு) கிடைத்ததும், கனடாவில் பர்மனண்ட் ரெசிடென்ஸிற்கான (Permanent Residency) முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 60 நாட்கள் கிட்டும். இதற்குள் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி ப்ரொபைல் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையை முன்னெடுத்துச்செல்வதை உறுதி செய்வது அவசியமாகிறது. உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி CRS மதிப்பெண்களை அதிகரிக்கக் CanApprove ஐ தொடர்பு கொள்ளவும்.

உங்கள் எக்ஸ்பிரஸ் பதிவை நீங்கள் பதிவு செய்வதற்கு முன், PR விசாவிற்குத் தேவையானபடி உங்கள் தகுதிகள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்கும் செயல்முறையின் மூலம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: http://bit.ly/PR-VISA

அழைப்புக்கு: + 91-422-4980255 (இந்தியா) / + 971-42865134 (துபாய்)

helpdesk@canapprove.comக்கு மின்னஞ்சல் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Send Us An Enquiry

Enter your details below and we'll call you back when it suits you.




    [honeypot 953b1362b63bd3ecf68]





    Enquire Now Call Now